தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

திரைப்பட இயக்குநர் மகேந்திரன் காலமானார்

உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த திரைப்பட இயக்குநர்  மகேந்திரன் இன்று காலமானார்.

File pic

By

Published : Apr 2, 2019, 7:44 AM IST

Updated : Apr 2, 2019, 8:00 AM IST

'முள்ளும் மலரும்', 'உதிரிப் பூக்கள்' போன்ற படங்கள் மூலம் தமிழ் சினிமாவில்முக்கிய இடத்தை பெற்றவர் இயக்குநர் மகேந்திரன். இயக்குநர் என்பதை தாண்டி சமீப காலமாகபடங்களில்நடிகராகவும் வலம் வந்தார்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு பரிசோதனையில் பன்றிக்காய்ச்சல் இருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது.

இதனையடுத்து மகேந்திரன்தீவிர கண்காணிப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழிந்தார்.

Last Updated : Apr 2, 2019, 8:00 AM IST

ABOUT THE AUTHOR

...view details