'வல்லமை தாராயோ' படத்தின் மூலமாக தமிழ் சினிமாவுக்கு இயக்குநராக அறிமுகமானவர் மதுமிதா. அதன்பிறகு 'கொல கொலயா முந்திரிக்கா', 'மூனே மூனு வார்த்தை' ஆகிய படங்களை இயக்கியிருந்தார். தற்போது அவர் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் கே.டி. (எ) கருப்புதுரை. இந்தத் திரைப்படம் பல்வேறு சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு விருதுகளை வாரிக் குவித்துள்ளது.
சர்வதேச விருதுகள் வென்ற மதுமிதாவின் கே.டி. - வெளியானது ட்ரெய்லர்! - Director Madhumitha
இயக்குநர் மதுமிதா இயக்கத்தில் உருவாகியுள்ள கே.டி. படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
நாகை விஷால், மு.ராமசாமி, யோக் ஜப்பி ஆகியோர் இதில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பிள்ளைகளால் வாழ்க்கையை வெறுத்து வீட்டை விட்டு ஓடும் முதியவருக்கும், ஆதரவற்ற சிறுவன் ஒருவனுக்கும் இடையேயான உணர்வு கலந்த உறவை இயக்குநர் மதுமிதா அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார். இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி, தமிழ் சினிமா ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
இந்தத் திரைப்படம் வரும் நவம்பர் 22ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதுபோன்ற நல்ல திரைப்படத்துக்கு தமிழ் சினிமா ரசிகர்களின் ஆதரவு அவசியம் தேவை. இதனை அவர்கள் திரையரங்கில் சென்று பார்க்க வேண்டும் என சினிமா விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.