பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய வெற்றி படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் தற்போது உதயநிதி ஸ்டாலினை வைத்து புதிய படத்தை இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. மாமன்னன் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் வடிவேலு, கீர்த்தி சுரேஷ், பகத் பாசில் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.
மாரிசெல்வராஜ், வடிவேலு, உதயநிதி கூட்டணியில் ’மாமன்னன்’..! - வடிவேலு
மாரிசெல்வராஜ் இயக்கவிருக்கும் அடுத்த திரைப்படத்தில் உதயநிதி, வடிவேலு, பகத் பாசில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், அத்திரைப்படத்தின் டைட்டில் இன்று அதிகாரப்பூர்வமாக படக்குழுவினரால் வெளியிடப்பட்டுள்ளது.
![மாரிசெல்வராஜ், வடிவேலு, உதயநிதி கூட்டணியில் ’மாமன்னன்’..! மாரிசெல்வராஜ் , வடிவேலு, உதயநிதி கூட்டணியில் ’மாமன்னன்’..!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-14635894-thumbnail-3x2-mamannan.jpg)
மாரிசெல்வராஜ் , வடிவேலு, உதயநிதி கூட்டணியில் ’மாமன்னன்’..!
தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு பணியை மேற்கொள்கிறார். சமூகம் சார்ந்த திரைப்படங்களை எடுக்கும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வடிவேலு, உதயநிதி ஸ்டாலின், மற்றும் பகத் பாசில் நடிப்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.