இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் மாஸ்டர். இதில் கதாநாயகியாக மாளவிகா மோகனன் நடிக்க விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் உள்ள லீலா பேலஸ்சில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் விழாவில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் 'மாஸ்டர்' படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஆம்... விஜய் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மாஸ்டர் ட்ரெய்லர் வரும் 22ஆம் தேதி வெளியாகும் என்று அவர் விழா மேடையில் அறிவித்தார்.