'மாநரகம்' படம் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். இதையடுத்து இவரது இயக்கத்தில் கடந்த ஆண்டு இறுதியில் வெளியான 'கைதி' திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வரவேற்பை பெற்றது.
கைதி படத்தில் ஒரே இரவில் நடக்கும் நிகழ்வுகளை பாடல், ஹீரோயின் இல்லாமல் இப்படியும் தமிழ் சினிமாவில் ஒரு படத்தை எடுக்கலாம் என்று ஒரு புதிய ட்ரெண்டை லோகேஷ் உருவாக்கினார். அப்படத்தின் வெற்றியைத்தொடர்ந்து லோகேஷ் தற்போது 'மாஸ்டர்' படத்தை இயக்கி வருகிறார்.
இந்நிலையில் இன்று லோகேஷ் தனது 34வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி ரசிகர்கள் மட்டுமின்றி திரைபிரபலங்கள் என்று பலரும் லோகேஷுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மாஸ்டர் படக்குழு அவருக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதத்தில் கேக் வெட்டி அசத்தியுள்ளனர்.
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்கில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் ட்விட்டரில் #HBDMasterLokesh என்று ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:மனைவியுடன் 'வாத்தி கம்மிங் ஒத்து' பாடலுக்கு நடனமாடி அசத்திய சாந்தனு!