தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ஊடகங்களை கழுவிக் கழுவி ஊற்றிய கே.எஸ். ரவிக்குமார்! - கே.எஸ். ரவிக்குமார்

சென்னை: மக்களுக்கு தேவையில்லாத இயக்குநர் சங்கம் தேர்தல் பற்றிய செய்தியை ஊடகங்கள் எடுத்துச்செல்வது எங்களுக்கு ஒரு விளம்பரம்தான் என்று இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் கிண்டலாக தெரிவித்துள்ளார்.

KSRavikumar

By

Published : Jul 21, 2019, 3:41 PM IST

தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கத்திற்கான நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான தேர்தல் சென்னை வடபழனியில் உள்ள திரைப்பட இசை கலைஞர்கள் சங்க வளாகத்தில் இன்று காலை முதல் நடைபெற்றுவருகிறது. இந்தத் தேர்தலில் வாக்களித்த பின் பேசிய இயக்குநரும், நடிகருமான கே.எஸ். ரவிக்குமார், இயக்குநர் சங்கம் தேர்தல் என்பது சிறிய விஷயம்தான்.

இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் பேட்டி

இது மக்களுக்கு சம்பந்தம் இல்லை. ஆனால் ஊடகங்கள் ஏன் இதை மக்களிடம் எடுத்துச்செல்கின்றன என தெரியவில்லை. ஊடகங்களுக்கு வேற வேலை இல்லாததாலும், செய்தி இல்லாததாலும் இதை மக்களிடம் எடுத்துச்செல்கின்றனர். இருந்தாலும் இது எங்களுக்கு ஒரு விளம்பரம் என்று எண்ணிக் கொள்வதாக அவர் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details