சென்னை: இதயம், காதல் தேசம் போன்ற படங்களை இயக்கிய கதிர் நீண்டஇடைவெளிக்குப் பிறகு புதிய படம் ஒன்றை இயக்குகிறார்.
முரளி நடித்த இதயம் படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கதிர். அதன் பிறகு காதல் தேசம், காதலர் தினம் படங்களின் மூலம் அப்போதைய இளைஞர்களின் இதயத்தில் இடம் பிடித்தார். வெற்றிமாறன் இவரிடம் இணை இயக்குநராக பணிபுரிந்தார். கடைசியாக 2002ஆம் ஆண்டு தமிழில் காதல் வைரஸ் படத்தை கதிர் இயக்கினார்.