தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

தனுஷ் ஆரம்பத்தில் என்னைவிட கஷ்டப்பட்டவர் - எதற்காக இவ்வாறு சொன்னார் இயக்குநர் கஸ்தூரி ராஜா? - இயக்குநர் கஸ்தூரி ராஜா

'தனுஷ் ஆரம்பத்தில் என்னை விட மிகவும் கஷ்டப்பட்டவர்' என இயக்குநர் கஸ்தூரி ராஜா தங்கர் பச்சானின் 'டக்கு முக்கு டிக்கு தாளம்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசியுள்ளார்.

தனுஷ் ஆரம்பத்தில் என்னை விட கஷ்டப்பட்டவர்..! - இயக்குனர் கஸ்தூரி ராஜா!
தனுஷ் ஆரம்பத்தில் என்னை விட கஷ்டப்பட்டவர்..! - இயக்குனர் கஸ்தூரி ராஜா!

By

Published : Mar 16, 2022, 5:39 PM IST

சென்னை: தங்கர்பச்சான் இயக்கத்தில் அவரது மகன் விஜித் பச்சான் நடிக்கும் 'டக்குமுக்கு டிக்கு தாளம்' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இவ்விழாவில் நாசர், தங்கர்பச்சான், விஜித்பச்சான், கே.எஸ்.ரவிக்குமார், ஆர்.வி.உதயகுமார், பேரரசு, வெற்றிமாறன், கஸ்தூரிராஜா, யூகி சேது, பாண்டிராஜ், ஆரி, இசை அமைப்பாளர் தரண் குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தனுஷ் ஆரம்பத்தில் என்னை விட கஷ்டப்பட்டவர்..! - இயக்குநர் கஸ்தூரி ராஜா!

நிகழ்ச்சியில் பேசிய கஸ்தூரி ராஜா, 'தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆகும் விஜித் பச்சானுக்கு வாழ்த்துகள். இப்போது இருக்கும் அடக்கம் கடைசி வரை இருக்க வேண்டும்.

என் மகன் தனுஷ் என்னைவிட மிக அதிகம் கஷ்டப்பட்டுள்ளார். துள்ளுவதோ இளமை படத்தைப் பார்த்த விநியோகஸ்தர் ஒருவர் உங்கள் மகன் முகத்தை நீங்கள் பார்க்கலாம். பணம் போடுபவர்கள் பார்க்க முடியுமா என்றார். பிறகு அவரே இரண்டு ஆண்டுகள் கழித்து என்னிடம் தனுஷ் படத்தை வாங்கித்தருமாறு கெஞ்சினார்' எனக் கூறினார்.

இதையும் படிங்க:பிரசாந்த் கிஷோரை சந்திக்கவில்லை... நடிகர் விஜய் தரப்பு மறுப்பு!

ABOUT THE AUTHOR

...view details