சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக அரசியல் கருத்துகளை முன் வைத்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பேசுவதும், அரசியல் தொடர்பான விவாத நிகழ்ச்சியில் பங்கேற்பதுமாக இருந்தார் கரு.பழனியப்பன். அத்துடன் மதுரை நாடளுமன்றத் தொகுதியின் மாநிலங்களவை உறுப்பினரான சு.வெங்கடேசனுக்கு ஆதரவாகவும் பிரசாரம் மேற்கொண்டார்.
‘தலைவர்கள் சிலை உடைப்பால் இளைஞர்களுக்கு கிடைக்கும் நன்மை!’ - கரு.பழனியப்பன் ட்வீட் - Ambedkar statue damage issue in vedaranyam
அம்பேத்கரும், பெரியாரும் சமூக முன்னேற்றம் குறித்து சிந்தித்ததில் பெரிய தலைகள் என்பது இளைய தலைமுறைக்கு அவர்களின் சிலைகள் உடைக்கப்படும்போதுதான் புரிகிறது என்று கரு.பழனியப்பன் கருத்து தெரிவித்துள்ளார்.
Director Karu Pazhaniappan
தேர்லுக்குப் பின்னர் அவ்வளவாக அரசியல் சார்ந்த நிகழ்ச்சிகளில் தலைகாட்டாமல் இருந்து வந்த கரு.பழனியப்பன், தற்போது அம்பேத்கர் சிலை உடைப்புக்கு ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.