'திருவாளர் பஞ்சாங்கம்' எனும் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்ட பின்னர் இயக்குநர் பாக்யராஜ் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது ' பெள்ளாச்சி விவகாரத்தில் பெண்கள் கவனமாக இருந்தால், அச்சம்பவத்தை தவிர்த்திருக்கலாமே என்று மட்டும்தான் தான் கூறியதாகவும், ஆனால் அச்செய்தி திரித்துக் கூறப்பட்டது' என்றும் கூறினார். இதனால் தான் சின்மயி உள்ளிட்டோர், தனக்கு எதிராகப் பேசியுள்ளதாகவும் தெரிவித்தார்.
தன்னுடைய படத்திலும் நிஜவாழ்விலும் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக தெரிவித்த பாக்யராஜ், தான் எந்தத் தவறும் செய்யவில்லை, அதனால் தான் ஆண்கள் பாதுகாப்பு சங்கம் ஆதரவு கொடுத்துள்ளார்கள் என்றும் குறிப்பிட்டார். சினிமாவில் உள்ளவர்கள் சிலர் தன்னிடம் தான் தவறாகப் பேசவில்லை என்று சொன்னதாகவும் பாக்யராஜ் விளக்கம் அளித்தார்.