தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

பிரபல இயக்குநருடன் மீண்டும் இணைகிறார் சூர்யா...! - actor suriya to join with Director Hari

'சூரரைப் போற்று' திரைப்படம் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ள நிலையில், தனது அடுத்த படத்திற்கு பிரபல இயக்குநருடன் நடிகர் சூர்யா இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Director Hari new movie with Actor Suriya
Director Hari new movie with Actor Suriya

By

Published : Feb 26, 2020, 5:36 PM IST

சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள 'சூரரைப் போற்று' திரைப்படம் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளதை அடுத்து இயக்குநர் ஹரியுடன் சூர்யா இணையப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

'சூரரைப் போற்று' திரைப்படம் வெளியாகும் அதே மாதத்தில் ஹரியுடன் படப்பிடிப்பு வேலைகளில் சூர்யா இணைவார் என்றும் கூறப்படுகிறது.

இந்தத் திரைப்படம் கே. ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கலாம் என்றும் இதற்கு முன்பாக படத்தை சூர்யா தனது 2டி என்டர்டைன்மென்ட் நிறுவனம் மூலம் தயாரிக்க இருந்ததாகவும் கூறப்படுகிறது.

படம் குறித்த கூடுதல் விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக 'ஆறு', 'வேல்', 'சிங்கம்' திரைப்படத்தின் மூன்று பாகங்களில் சூர்யா ஹரியுடன் பணிபுரிந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தமிழ் 'பெல்லி சூப்புலு' நிறைவு - ட்விட்டரில் அறிவித்த 'தாராள பிரபு' ஹரிஷ் கல்யாண்

ABOUT THE AUTHOR

...view details