தமிழ் சினிமாவில் சூப்பர் ஹிட் காம்போ எனக் கூறப்படும் நடிகர் சூர்யா - இயக்குநர் ஹரி ஆகியோர் ஆறாவது முறையாக கூட்டணி அமைத்துள்ள படம் 'அருவா'.
இந்தப் படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல்ராஜா தயாரிக்கிறார். சூர்யா நடிக்கும் 39ஆவது படமாகவும், இயக்குநர் ஹரியின் 16ஆவது படமாகவும் உருவாகிறது. படத்திற்கு 'அருவா' எனப் பெயரிடப்பட்டுள்ள நிலையில், கிராமத்துப் பின்னணியில் காதல், குடும்ப சென்டிமென்ட் கலந்த அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக உருவாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைக்கிறார். ஏப்ரல் மாதம் படப்பிடிப்பு தொடங்கி ஒரேகட்டமாக படப்பிடிப்பை முடித்து 2020ஆம் ஆண்டு தீபாவளிக்கு படம் வெளியாகும் என்று படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது.
ஆனால் தற்போது கரோனா அச்சம் காரணமாக அருவா படத்தின் படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கரோனா தொற்றால் தமிழ் திரையுலகம் கடும் பொருளதார பிரச்சனையை சந்தித்துள்ளது. இதிலிருந்து மீண்டுவருவது எப்படி என தயாரிப்பாளர்கள் ஆலோசித்துக்கொண்டிருக்கையில் இசையமைப்பாளருரம், நடிகருமான விஜய் ஆண்டனி சம்பளத்தில் 25 சதவீதத்தை குறைத்து கொள்ளுமாறு தாமாகவே முன்வந்து கூறினார். இவரின் இந்தசெயலுக்கு தயாரிப்பாளர்கள் பலர் பெரும் ஆதரவு அளித்தனர்.