தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

இயக்குநர் ஹரி மருத்துவமனையில் அனுமதி! - director Hari

பழனியில் படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்தபோது கடும் காய்ச்சல் ஏற்பட்டதை அடுத்து, இயக்குநர் ஹரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இயக்குநர் ஹரி
இயக்குநர் ஹரி

By

Published : Mar 19, 2021, 11:58 AM IST

சாமி, சிங்கம், கோவில், ஐயா உள்ளிட்ட கமர்ஷியல் வெற்றிப்படங்களை இயக்கிய பிரபல இயக்குநர் ஹரி. இவர் தற்போது தனது மைத்துனர் அருண் விஜய்யின் 33ஆவது படத்தை இயக்கி வருகிறார். பெயரிடப்படாத இப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானிசங்கர் நடித்து வருகிறார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பழனியில் தற்போது நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இயக்குநர் ஹரியுடன் பணியாற்றிய நபர் ஒருவருக்கு முன்னதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரைத் தொடர்ந்து ஹரிக்கும் காய்ச்சல் ஏற்பட்ட நிலையில், தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முன்னதாக ஹரிக்கு செய்யப்பட்ட கரோனா பரிசோதனையில் அவருக்கு கரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:'வெனம் 2' படத்தின் புதிய வெளியீட்டு தேதி அறிவிப்பு!

ABOUT THE AUTHOR

...view details