வேல்ஸ் பிலிம் இண்டர் நேஷனல் சார்பில் தயாரிப்பாளர் ஐசரி கணஷ் தயாரித்துள்ள படம் குட்டி ஸ்டோரி. ஆந்தாலஜி வகைமையைச் (genre) சேர்ந்த இப்படத்தை இயக்குநர்கள் கெளதம் வாசுதேவ் மேனன், வெங்கட் பிரபு, ஏ.எல் விஜய், நலன் குமாரசாமி ஆகியோர் இயக்கியுள்ளனர். இப்படம் பிப்ரவரி 12ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. தமிழில் முதன் முறையாக நான்கு இயக்குநர்கள் இயக்கிய ஆந்தாலஜி வகைமைத் திரைப்படம் திரையரங்கில் வெளியாகவுள்ளது.
கெளதம் மேனன் இயக்கிய கதையில் அவரே நாயகனாக நடித்துள்ளார். இதில் முக்கிய கதாபாத்திரத்தில் அமலாபால் நடித்துள்ளார். விஜய் இயக்கியுள்ள கதையில் மேகாஆகாஷ் நாயகியாகவும் அமிர் டாஸ் பிரதான், ஆர்யா, சுகாசினி ஆகியோர் நடித்துள்ளனர். வெங்கட்பிரபு இயக்கியுள்ள கதையில் வருண் சங்கீதா, சாக்ஷி ஆகியோர் நடித்துள்ளனர். நலன் குமாரசாமி இயக்கியுள்ள கதையில் விஜய் சேதுபதி, அதிதி பாலன் நடித்துள்ளனர்.