தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'ரைட்டர்' சமுத்திரக்கனியின் சினிமா பயணத்தில் மிக முக்கியமானது - இயக்குநர் பிராங்க்ளின் ஜேக்கப் - இயக்குநர் பிராங்ளின் ஜேக்கப்

சென்னை: சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகிவரும் 'ரைட்டர்' படம் அவரது சினிமா பயணத்தில் மிக முக்கியமானதாக இருக்கும் என படத்தின் இயக்குநர் பிராங்க்ளின் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.

samuthirakani
samuthirakani

By

Published : Apr 30, 2021, 2:39 PM IST

இயக்குநர் பா.இரஞ்சித் தனது நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பு நிறுவனம் மூலம் படங்கள் தயாரித்து வருகிறார். 'பரியேறும் பெருமாள்', 'இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு' என இரண்டு படங்கள் பா.இரஞ்சித் தயாரிப்பில் வெளிவந்து பெரும் வெற்றி பெற்றதுடன் வரவேற்பையும் பெற்றது.

தொடர்ந்து படத்தயாரிப்பில் ஈடுபட்டுவரும் பா.இரஞ்சித் தன்னிடம் உதவியாளராக இருந்த பிராங்க்ளின் ஜேக்கப் இயக்கும் 'ரைட்டர்' படத்தினை தயாரிக்கிறார்.

சமுத்திரக்கனி இந்த படத்தில் காவல்துறையில் பணிபுரியும் 'ரைட்டர்' கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதிகார மையத்தில் பணிபுரியும் ஒரு எளிய மனிதனாக இயல்பான வாழ்வை வாழ்பவராக நடித்திருக்கிறார். ஹரிகிருஷ்ணன், இனியா, இயக்குநர் சுப்ரமணியம் சிவா உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

வழக்கமான சமுத்திரக்கனியை இந்தப் படத்தில் பார்க்க முடியாது, இது அவரது சினிமா பயணத்தில் மிக முக்கியமான படமாக இருக்கும் என இயக்குநர் பிராங்க்ளின் ஜேக்கப் தெரிவித்துள்ளார். பிரதீப் காளிராஜா ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details