இயக்குநராக இருந்த எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் கவனம் செலுத்தியபின் ஏராளமான படங்களில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமானார். அவரது நடிப்பில் நீண்ட நாள்களாக வெளியாகாமல் இருந்த செல்வராகவன் இயக்கிய 'நெஞ்சம் மறப்பதில்லை' படம் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு சமீபத்தில் வெளியானது.
கடவுள் திட்டப்படி எவ்லாம் நடக்கும் - 'இறவாக்காலம்' வெளியீடு குறித்து எஸ்.ஜே. சூர்யா! - இறவாக்காலம் வெளியாகும் தேதி
சென்னை: தன்னுடைய நடிப்பில் உருவாகியுள்ள 'இறவாக்காலம்' திரைப்படம் வெளியீடு குறித்து இயக்குநரும் நடிகருமான எஸ்.ஜே. சூர்யா தற்போது பதிலளித்துள்ளார்.
![கடவுள் திட்டப்படி எவ்லாம் நடக்கும் - 'இறவாக்காலம்' வெளியீடு குறித்து எஸ்.ஜே. சூர்யா! iravakkalam](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-11143766-655-11143766-1616600748486.jpg)
அதேபோல் 'மாயா' படத்தை இயக்கிய அஸ்வின் சரவணன் இயக்கத்தில் எஸ்.ஜே. சூர்யா, ஷிவதா ஆகியோர் நடித்திருந்த படம் 'இறவாக்காலம்'. 2017ஆம் ஆண்டே எடுத்து முடிக்கப்பட்ட இப்படம் இன்றுவரை என்ன ஆனது என்றே தெரியவில்லை. இப்படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிக்ஷர்ஸ் தயாரித்திருந்தது.
இது குறித்துப் பலமுறை அப்படத்தின் இயக்குநர் அஸ்வினிடம் ரசிகர்கள் கேட்டுப் பார்த்தனர். தற்போது ட்விட்டரில் எஸ்.ஜே. சூர்யாவிடம் இந்தப் படம் எப்போது வெளியாகும் என்று ரசிகர் ஒருவர் கேட்டுள்ளார். அதற்கு அவர், "கடவுளின் திட்டப்படி எல்லாம் நடந்துகொண்டு இருக்கிறது. அதுவரை அமைதியாக இருப்போம் ப்ரோ" என்று பதிவிட்டுள்ளார்.