தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

சித்ரா லட்சுமணன் எழுதிய புத்தகம்! - கமல் ஹாசன் வெளியிட்டார்! - நெஞ்சம் மறப்பதில்லை முதல் பாகம்

தயாரிப்பாளரும் இயக்குநருமான சித்ரா லட்சுமணன் எழுதிய புத்தகத்தை நடிகர் கமல் ஹாசன் வெளியிட்டார்.

release
release

By

Published : Dec 15, 2020, 11:51 AM IST

தமிழ் சினிமா உலகில் நடந்த சுவையான தகவல்களையும், திரைக் கலைஞர்கள் வாழ்க்கையில் நடந்த பல நிகழ்வுகளையும் தொகுத்து, ’80 ஆண்டுகால தமிழ் சினிமா முதல் பாகம்’ என்ற புத்தகத்தை எழுதிய, இயக்குநரும், தயாரிப்பாளரும், நடிகருமான சித்ரா லட்சுமணன், அதைத்தொடர்ந்து திரையுலகில் தனக்கேற்பட்ட அனுபவங்களை ’என்னவென்று சொல்வேன்’ என்ற பெயரில் புத்தகமாக எழுதினார்.

இவ்விறு புத்தகங்களும் திரைத்துறையினர் மத்தியில் வரவேற்பு பெற்றிருந்த நிலையில், தற்போது ’நெஞ்சம் மறப்பதில்லை முதல் பாகம்’ என்ற மூன்றாவது புத்தகத்தை அவர் எழுதியுள்ளார். சினிமாவில் நடந்த பல சுவையான சம்பவங்களைப் பற்றி மூன்றாண்டு காலம் தொடர்ந்து ஒவ்வொரு வாரமும், நாளிதழ் ஒன்றில் சித்ரா லட்சுமணன் எழுதிய கட்டுரைகளின் தொகுப்புதான் இந்த புத்தகம்.

ஜீரோ டிகிரி பப்ளிகேஷன் வெளியீட்டில் நெஞ்சம் மறப்பதில்லை

ஜீரோ டிகிரி பப்ளிகேஷன் சார்பில் ராம்ஜி-காயத்ரி ஆகிய இருவரும் இணைந்து வெளியிட்டுள்ள இந்தப் புத்தகத்தின் வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நடிகர் கமல் ஹாசன் கலந்து கொண்டு சித்ரா லட்சுமணனின் நெஞ்சம் மறப்பதில்லை புத்தகத்தின் முதல் பிரதியை வெளியிட்டார்.

இதையும் படிங்க: வெயில் எனக்கு கற்றுக்கொடுத்தது என்ன? இயக்குநர் வசந்தபாலன் பேட்டி

ABOUT THE AUTHOR

...view details