தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

மின் கட்டணம் ஏழைகளை மிரட்டுகிறது - சேரன் - சேரன்

வேலையின்றி வீட்டிற்கு உணவிற்குத் தேவையான பணம் சம்பாதிக்கவே கஷ்டப்படும் சூழலில், மின் கட்டணம் ஏழைகளை மிரட்டுகிறது என இயக்குநர் சேரன் தெரிவித்துள்ளார்.

சேரன்
சேரன்

By

Published : Jul 4, 2020, 2:42 PM IST

கரோனா ஊரடங்கு காலத்தில் அனைவருக்கும் முன்பைவிட அதிகமாக மின் கட்டணம் வசூலிக்கப்படுவதாக பலதரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இயக்குநர் சேரன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், "தமிழ்நாடு முழுவதும் மின்வாரியத் துறையின் செயல்பாடுகளில் ஒரு தெளிவின்மை தென்படுகிறது. ஒவ்வொரு மாதத்திற்கான மின் கட்டணம் இதுவரை மாதாமாதம் கட்டிய தொகையிலிருந்து, இரண்டு மூன்று மடங்காக பில் வந்திருக்கிறது. (கிராமங்களில் இருப்பவர்களுக்கும்) அதற்கான காரணம் சொல்லப்படவில்லை.

இதுபோன்ற காலகட்டங்களில் மக்களுக்கு சலுகையோடு செயல்படவேண்டிய நிர்வாகம், இப்படி அதிகப்படியாக வசூலிக்க நினைப்பது கேள்வியை எழுப்புகிறது. இதை எங்கே எப்படி கேட்பது என்று தெரியாத அப்பாவி மக்கள் விழிபிதுங்கி நிற்கிறார்கள். அந்தத் துறை சார்ந்த அமைச்சர்கள் மற்றும் அலுவலர்கள் கவனிப்பார்களாக.

வேலையின்றி வீட்டிற்கு உணவிற்குத் தேவையான பணம் சம்பாதிக்கவே கஷ்டப்படும் சூழலில், இதுபோன்ற விஷயங்கள் ஏழைகளை மிரட்டுகிறது. வீட்டுக்கு வாடகையே கட்ட முடியாதவர்கள் எங்கிருந்து மின்சாரக் கட்டணம் இரண்டு மூன்று மடங்காக கட்டமுடியும். இதுபோன்ற நேரங்களில் தளர்வு அளிக்கவேண்டும் அரசு" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:மின் கட்டணத்தை பார்த்து அதிர்ந்துபோன காலா பட நடிகை

ABOUT THE AUTHOR

...view details