தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'அஜித் சார் இளைஞருக்கான ரோல்மாடல்' - வாழ்த்திய சேரன் - இயக்குநர் சேரன்

சென்னை: மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் பதக்கங்களை வென்ற அஜித்திற்கு இயக்குநரும் நடிகருமான சேரன், நெகிழ்ச்சியுடன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

Cheran
Cheran

By

Published : Mar 8, 2021, 6:08 PM IST

சென்னை ரைபிள் கிளப் சார்பில் மாநில அளவிலான 46ஆவது துப்பாக்கி சுடும் போட்டி ஆவடி அடுத்த வீராபுரத்தில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல்படை 3ஆம் அணியில் தொடங்கியது. இந்தப் போட்டி கடந்த 3ஆம் தேதியிலிருந்து 7ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில், மாநிலம் முழுவதும் இருந்து 780க்கும் மேற்பட்ட மாணவர்கள் இளைஞர்கள் பங்கேற்றனர்.

மொத்தம் ஐந்து நாள்கள் பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற போட்டியில் 180 பேர் வெற்றி பெற்றுள்ளனர். நடிகர் அஜித்குமார் சீனியர் பிரிவில் பங்கேற்று 25 மீட்டர் துப்பாக்கி சுடுதலில் 3 தங்கம், 10 மீட்டரில் 2 வெள்ளி, 15 மீட்டரில் 2 வெள்ளிப் பதக்கங்களை வென்று சாதனைப் படைத்துள்ளார்.

இந்த வெற்றியின் மூலம் அடுத்த மாதம் டெல்லியில் நடைபெறும் தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டிக்கு அஜித் தேர்வாகியுள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு முதல் நடிகர் அஜித், சென்னையில் உள்ள ரைபிள் கிளப்பில் துப்பாக்கி சுடும் பயிற்சி பெற்று வருகிறார்.

துப்பாக்கி சுடுதல் போட்டியில் பதக்கங்களை அள்ளிய அஜித்துக்கு பிரபலங்களுக்கும், ரசிகர்களும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் இயக்குநரும் நடிகருமான சேரன் தனது ட்விட்டர் பக்கத்தில், "தமிழ்நாடு வரையிலான துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றிருக்கிறார்.. எம்.ஐ.டி யில் விமானம் ஓட்டும் பயிற்சிக்கான வகுப்பில் சிறப்பு அட்வைஸர்.... சினிமாவில் நடிகனாக மட்டுமில்லாமல் தனது மற்ற திறமைகளை வெளிக்கொணரும் அஜித் சார் பாராட்டுக்குரிய ஒரு ரோல் மாடல்.. இளைஞர்களுக்கு" என பதிவிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details