தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

கெளதம் கார்த்திக் - சேரன் இணைந்து நடிக்கும் புதிய படம் - இயக்குநர் நந்தா பெரியசாமி

குடும்பு உறவுகளின் வலிமையையும் ஒற்றுமையும் மேம்படுத்தும் விதமமாக உருவாகும் கதையில் கெளதம் கார்த்திக் - இயக்குநர் சேரன் இணைந்து நடிக்கவுள்ளனர்.

Cheran and gautham karthik
சேரன், கெளதம் கார்த்திக்

By

Published : Feb 12, 2021, 5:50 PM IST

சென்னை: இயக்குநர் நந்தா பெரியசாமி இயக்கும் புதிய படத்தில் சேரன் - கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கிறார்கள்.

கடந்த 2019இல் யோகிபாபு நடிப்பில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த படம் தர்மபிரபு, இந்தப் படத்தை தயாரித்த ஸ்ரீ வாரி பிலிம்ஸ் அடுத்ததாக முன்னணி நடிகர்கள் பலரையும் வைத்து வைத்து குடும்ப படம் ஒன்றை தயாரிக்கிறது.

குடும்ப உறவுகளின் வலிமையையும் ஒற்றுமையையும் மேம்படுத்தும் விதமாக உருவாகும் இந்தப் படத்தில் கெளதம் கார்த்திக் - இயக்குநர் சேரன் இணைந்து நடிக்கிறார்கள்.

டாக்டர் ராஜசேகர் - ஜீவிதாவின் இரண்டாவது மகள் ஷிவாத்மிக்கா கதாநாயகியாக இந்தப் படத்தில் அறிமுகமாகிறார்.

நடிகர் ராஜசேகரின் மகள் ஷிவாத்மிக்கா

டேனியல் பாலாஜி, சரவணன், 'கிழக்கு சீமையிலே' விக்னேஷ், சிங்கம் புலி, ஜோமல்லூரி, கவிஞர் சிநேகன், நமோ நாராயணன், சௌந்தர்ராஜன், 'விஜய் டிவி' ஜாக்குலின், மௌனிகா, மைனா, 'பருத்திவீரன்' சுஜாதா, ஜானகி, பிரியங்கா என ஏராளமான நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் நடிக்கிறார்கள்.

படத்தை ஒரு கல்லூரியின் கதை, மாத்தியோசி உள்ளிட்ட படங்களை இயக்கிய நந்தா பெரியசாமி எழுதி இயக்குகிறார். ஒளிப்பதிவு - 'சிவப்பு மஞ்சள் பச்சை' படப் புகழ் பொர்ரா பாலபரணி இசை - சித்துகுமார். பாடல்கள் - கவிஞர் சிநேகன். தயாரிப்பு - பி. ரங்கநாதன். வரும் மார்ச் மாதம் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details