திரைத்துறையிலும் மற்ற பிற துறைகளிலும் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் சீண்டல்கள் பாதிக்கப்பட்ட பெண்கள் வெளியே வந்து கூறியது #Metoo இயக்கத்தில்தான்.
இதற்கிடையில் தமிழ் சினிமாவில் பெரிதும் சர்ச்சையான பிரச்னை என்றால் அது சின்மயி வைரமுத்து பிரச்னைதான். தனக்கு வைரமுத்து பாலியல் சீண்டல் கொடுத்ததாக சின்மயி சமூக வலைத்தளங்களில் தெரிவித்திருந்தார்.
தன்னை நிகழ்ச்சி ஒன்றுக்கு வரச் சொல்லி கட்டாயப்படுத்தியதாகவும் வைரமுத்து மீது சின்மயி குற்றம் சாட்டினார். இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில் 'தமிழ் படம்' திரைப்படத்தின் இயக்குநர் சி. எஸ். அமுதன் சின்மயிக்கு ஆதரவாக ட்விட்டர் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் சின்மயி குறிப்பிட்ட அந்த நிகழ்ச்சிக்கு வருமாறு அவர் கட்டாயப்படுத்தப்பட்டார் என்றும் அந்த நேரத்தில் அவருக்கு இருந்த பயம் உண்மையானது எனவும் தெரிவித்தார்.
இதனை தனக்குதான் சின்மயி முதலாவதாக அழைத்து தெரிவித்தார் என்று இயக்குநர் சி. எஸ். அமுதன் குறிப்பிட்டார். இதை தொடர்ந்து 2018ஆம் ஆண்டு நவம்பர் மாதம், தன்னை தமிழ்நாடு டப்பிங் ஆர்ட்டிஸ்ட்ஸ் யூனியனில் இருந்து நீக்கிவிட்டனர் என்று சின்மயி குறிப்பிட்டார்.