உடலை வருத்தி உச்சம் தொட்ட உலக நாயகன் - பாரதிராஜா புகழாரம்! - இயக்குனர் பாரதிராஜாவின் படங்கள்
சென்னை: கமல்ஹாசன் திரையுலகிற்கு அறிமுகமாகி 61 ஆண்டுகள் நிறைவுப் பெற்றதையொட்டி இயக்குநர் பாரதிராஜா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இயக்குநர் பீம்சிங் இயக்கத்தில், கடந்த 1960ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12ஆம் தேதி வெளியான 'களத்தூர் கண்ணம்மா' என்னும் படத்தின் மூலம் உலகநாயகன் கமல்ஹாசன் குழந்தை நட்சத்திரமாக, தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இப்படத்தில் ஜெமினி கணேசன், சாவித்ரி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
கமல் திரையுலகுக்கு அறிமுகமாகி இன்றுடன் (ஆகஸ்ட்.12) 61 ஆண்டுகள் ஆகின்றது. இதனை அவரது ரசிகர்கள் சமூக வலைதளத்தில் கொண்டாடி வருகின்றனர். கமல்ஹாசனுக்கு பல்வேறு தரப்பினர் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் கமல்ஹாசனுக்கு இயக்குநர் பாரதிராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அந்த அந்தப் பதிவில், இந்தியத் திரை உலகில் அரை நூற்றாண்டுக்கு மேல் கடந்து பல்வேறு தொழில் நுட்பங்கள், பல நூறு கதாபாத்திரங்கள், உடலை வருத்தி உச்சம் தொட்ட உலக நாயகன் என் கமலுக்கு வாழ்த்துக்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.