தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இவர் தமிழ் சினிமா மட்டுமல்லாது, பாலிவுட், ஹாலிவுட் என அனைத்து திரைத்துறையிலும் கால்பதித்துள்ளார்.
சமூகவலைதளமான ட்விட்டரில் ஒரு கோடி நபர்கள் பின் தொடரும் முதல் கோலிவுட் நடிகர் எனும் சாதனையை தனுஷ் சமீபத்தில் படைத்தார்.
கோலிவுட், டோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என கால் பதித்து தொடர்ந்து தன் எல்லைகளை விஸ்தரித்து வரும் தனுஷ், ஒரு புறம் கமர்ஷியல் படம், மற்றொரு புறம் கலைத்தன்மை மிக்க கதைக்களங்கள் எனத் தேர்வு செய்து நடித்து வெரைட்டி காட்டி ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.
இன்று (ஜூலை.28) தனுஷ் தனது 38ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு ரசிகர்கள், திரைபிரபலங்கள் பலர் சமூகவலைதளத்தில் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில் இயக்குநர் பாராதிராஜா தனுஷூக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து தனது ட்விட்டரில் வாழ்த்து மடலை பதிவிட்டுள்ளார்.