இந்தியாவில் தற்போது கரோனா இரண்டாவது அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் இறப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், மே 1ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்தது. இதனையடுத்து பொதுமக்கள் அரசு மருத்துவமனைகளிலும் தனியார் மருத்துவமனைகளிலும் தொடர்ந்து கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் கடந்த சில நாள்களாக திரைப் பிரபலங்கள் பலர் கரோனா தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். இதன் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக திரைப் பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் தடுப்பூசி செலுத்திக் கொண்டு அந்தப் புகைப்படங்களை சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.