தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

அரசை விமர்சித்தால் தேச துரோகி, நகர்ப்புற நக்சலா...? - பாரதிராஜா கண்டனம் - தலித் மற்றும் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்

சென்னை: தலித் மற்றும் சிறுபான்மையினர் மீது நடத்தப்பட்ட கும்பல் படுகொலைக்கு எதிராக பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்த இயக்குநர் மணிரத்னம் உட்பட 49 பேர் மீது தொடரப்பட்டுள்ள தேசத்துரோக வழக்கை திரும்பப் பெற வேண்டும் என இயக்குனர் பாரதிராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இயக்குநர் பாரதிராஜா

By

Published : Oct 8, 2019, 1:52 PM IST

Updated : Oct 8, 2019, 6:36 PM IST

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

இயக்குநர் மணிரத்னம், அடூர் கோபாலகிருஷ்ணன், ரேவதி உள்ளிட்ட 49 பேர் மீது தேசத்துரோக குற்றச்சாட்டு பதிவு செய்துள்ளதற்கு எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

மத வெறுப்புகளை ஏற்படுத்தி, வன்முறைகளை கட்டவிழ்த்துவிடும் போக்கு அதிகரித்துள்ளது. அரசை விமர்சிப்பதாலே ஒருவரை தேச விரோதி, நகர்ப்புற நக்சல் என முத்திரை குத்துவதை ஏற்கமுடியாது.

தங்களுடைய கவலையை தானே அவர்கள் குறிப்பிட்டிருந்தார்கள். இதற்காக தேசதுரோக வழக்குப்பதிவு செய்வதை ஏற்க முடியாது. அரசு சார்பில் பேசியவர்கள், மத்திய அரசுக்கு இதில் தொடர்பில்லை என்று சொல்லியிருக்கிறார்கள்.

இயக்குநர் பாரதிராஜா கண்டன அறிக்கை

கலைஞர்கள் தங்கள் கருத்தை திரைப்படங்கள் மூலமாகவே பதிவு செய்ய வேண்டும். பொதுவெளியில் பேசக் கூடாது என்று அச்சுறுத்துவதும் பொய் வழக்குகளின் பேரில் மாற்றுக் கருத்துடையவர்களை மௌனமாக்க முயல்வதும் ஏற்கத்தக்கதல்ல.

ஆகவே மத்திய அரசு உடனடியாக 49 பேருக்கு எதிரான தேசத்துரோகக் வழக்கினைத் திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு பாரதிராஜா கூறியுள்ளார்.

Last Updated : Oct 8, 2019, 6:36 PM IST

ABOUT THE AUTHOR

...view details