தலைமைச் செயலகத்தில் இன்று செய்தி மற்றும் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜுவுடன் தமிழ் திரைத்துறையினர் ஆலோசனையில் ஈடுபட்டனர். அப்போது திரைப்படங்களுக்கான படப்பிடிப்பை நடத்த அனுமதிக்கவும், திரையரங்குளை திறக்கவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இயக்குநர் பாரதிராஜா, ”கரோனா பாதிப்பு காரணமாக திரைத்துறை முற்றிலுமாக முடங்கியுள்ள நிலையில், தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, திரையரங்குகளை திறக்கவும், படப்பிடிப்புகளை அனுமதிக்கவும் முதலமைச்சர் மற்றும் அமைச்சர் ஆகியோரிடம் கோரிக்கை வைத்துள்ளோம். நிச்சயம் நல்ல அறிவிப்பு வெளியாகும் என்று நம்புகிறோம் “ என்று கூறினார்.