தமிழில் 'சாமுராய்', 'காதல்', 'கல்லூரி', 'வழக்கு எண் 18/9', போன்ற படங்களை இயக்கிய பாலாஜி சக்திவேல், தற்போது புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். 'நான் நீ நாம்' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில், வீரா, சாந்தினி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
இயக்குநர் பாலாஜி சக்திவேலின் 'நான் நீ நாம்'! - இயக்குநர் பாலாஜி சக்திவேலின் நான் நீ நாம்
பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் உருவாகவுள்ள 'நான் நீ நாம்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது.
naan
இப்படத்தை புளூ மூன் கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஜாவித் ரியாஸ் இசை அமைத்துள்ளார். இந்நிலையில், 'நான் நீ நாம்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு, படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: நகரத்துக்கு வந்தும் சாதி நம்மை வேட்டையாடுகிறது - பாலாஜி சக்திவேல்