தமிழ் திரையுலகில் தனக்கென ஓர் இடம், தனக்கென ஓர் ரசிகர் பட்டாளைத்தை வைத்துள்ள இயக்குநர் பாலா இன்று (ஜூலை 11) தனது 55ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் பிறந்த பாலா, சினிமா மீது தீராத காதல் கொண்டவர். இவர், இயக்குநர் பாலுமகேந்திராவிடம் உதவியாளராக பணியாற்றியவர்.
பின்னர், தயாரிப்பு உதவியாளராக இருந்த பாலா, உதவி இயக்குநராக பணியாற்றினார். இதையடுத்து 1999ஆம் ஆண்டு நடிகர் விகரம்-ஐ வைத்து சேது என்னும் திரைப்படத்தை இயக்கி தமிழ் சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தார்.
இதையடுத்து, நடிகர் சூர்யாவை வைத்து நந்தா திரைப்படத்தை இயக்கினார். அதுவும் மாபெரும் வெற்றியைத் தொட்டது.