விஜய் - அட்லி கூட்டணியில் நேற்று (அக்.25) வெளியாகியுள்ள திரைப்படம் 'பிகில்'. பெண்களின் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தில் விஜய் பயிற்சியாளராக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.
மேலும் இத்திரைப்படத்தில் கதிர், இந்துஜா, ஜாக்கி ஷெராஃப், விவேக், யோகி பாபு என பல்வேறு நட்சத்திரங்களும் நடித்துள்ளனர். ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்.
ரசிகர்கள் மத்தியில் ராயப்பன் கதாபாத்திரம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனையடுத்து, ‘பிகில்’ படத்தின் இயக்குநர் அட்லியிடம் சமூக வலைதளத்தில் ரசிகர் ஒருவர் ராயப்பன் கதாபாத்திரத்தின் இளம் பருவம் குறித்த ஒரு திரைப்படம் எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள்விடுத்தார். இந்த வேண்டுகோளுக்கு பதிலளித்த அட்லி 'செஞ்சிட்டா போச்சு நண்பா' என்று தனது பாணியில் கூறியுள்ளார்.
தற்போது ஒரு படத்தின் இரண்டாம் பாகம் அதிக அளவில் தமிழ் சினிமாவில் எடுக்கப்பட்டுவருகின்றன. இதனையடுத்து பிகில் முந்தைய பாகமாக ராயப்பனின் இளமை வயது கதாபாத்திரம் குறித்த படம் எடுக்கப்படுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
இதையும் வாசிங்க:'பிகில்' தனது படம் அல்ல: பல்டி அடித்த அட்லி!