தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

விஜய் சேதுபதி படத் தயாரிப்பாளருக்கு கிடைத்த கெளரவம்! - மலேசியாவின் தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம்

சென்னை : இயக்குநரும் தயாரிப்பாளருமான ஆறுமுக குமார் மலேசியாவின் தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் கீழ் இயங்கும், தமிழ்ப்பட உள்ளடக்கம் இந்திய வணிகப் பிரிவின் நிர்வாகக் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆறுமுக குமார்
ஆறுமுக குமார்

By

Published : Jul 3, 2020, 7:09 PM IST

விஜய் சேதுபதி - கெளதம் கார்த்திக் இணைந்து நடித்த 'ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஆறுமுக குமார். தற்போது இவர் விஜய் சேதுபதி நடிக்கும் 'லாபம்' படத்தை தயாரித்து வருகிறார்.

இந்நிலையில், மலேசியாவின் தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் கீழ் இயங்கும், தமிழ்ப்பட உள்ளடக்கம் இந்திய வணிகப் பிரிவின் நிர்வாகக் குழு உறுப்பினராக ஆறுமுக குமார் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

இது குறித்து அவர் கூறுகையில், "மலேஷியாவின் தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம் எனக்கு அளித்த இந்த கெளரவம் நான் சற்றும் எதிர்பாராதது. இது எனக்கு மிகுந்த ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் கொடுத்திருக்கிறது.

ஓர் இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் தமிழ்ப்பட உலகம் எனக்கு பயனுள்ள பல அரிதான அனுபவங்களைக் கொடுத்திருக்கிறது. தமிழ்த் திரைப்பட உள்ளடக்கம் வணிகப் பிரிவின் (Tamil Film Content & India Market by National Film Development Corporation Malaysia (FINAS)) நிர்வாகக் குழு உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டதை எனக்குக் கிடைத்த பெரிய வரமாகவே கருதுகிறேன். இந்த வாய்ப்பின் மூலம் நமது வணிக எல்லைகளை மேலும் உயர்த்தவும், இந்தியா - மலேசியா பொழுதுபோக்கு வணிக மதிப்புகளை உயர்த்தவும் பாலமாக இருப்பேன்" எனக் கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details