பிரபல திரைப்பட இயக்குநர் அமீர், தனது குடும்பத்தினருடன் நேற்று முன்தினம் (ஜூன். 9) ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் தடுப்பூசி செலுத்திக் கொண்டார். இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், ”பெருந்தொற்று நோயிலிருந்து நம்மை பாதுகாக்க ஒன்றிய, மாநில அரசின் அறிவுறுத்தலின் பேரில் ஓமந்தூரார் சிறப்பு பல்நோக்கு அரசு மருத்துவமனையில் நானும், எனது குடும்பத்தாரும் முதல் தடுப்பூசியை செலுத்திக் கொண்டோம்.
பொது மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை மிகவும் சுகாதாரமாகவும், சிறந்த உபசரிப்புடனும் சிறப்பாக செய்து கொண்டிருக்கும் தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் ஆகியோருக்கு என் நெஞ்சார்ந்த நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.