தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

விஜய்க்கு விரைவில் இரண்டாவது திருமணம்.. பொண்ணு இவங்களா...! - விஜய்

இயக்குநர் விஜய் விரைவில் இரண்டாவது திருமணம் செய்துகொள்ள இருக்கிறார்.

AL vijay

By

Published : Jun 29, 2019, 1:46 PM IST

இயக்குநர் விஜய், தமிழில் அஜித் நடித்த 'கிரீடம்' படம் மூலம் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து 'மதராசபட்டினம்', 'தெய்வதிருமகள்', 'சைவம்', 'தலைவா' உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார்.

இதில், 'தெய்வதிருமகள்', 'தலைவா' படத்தில் நடிகை அமலா பால் நடித்திருந்தார். அப்போது விஜய்க்கும் அமலாபாலுக்கும் காதல் ஏற்பட்டது. இதனையடுத்து அவர்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். திருமணமான சில காலங்களிலேயே இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் இருவரும் சட்டரீதியாக விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.

இந்நிலையில், தற்போது விஜய்க்கு இரண்டாம் திருமணம் நடைபெறவுள்ளது. விஜய் திருமணம் செய்ய உள்ள பெண்ணின் பெயர் ஐஸ்வர்யா. ஐரோப்பாவில் மருத்துவம் படித்த இவர், தற்பொழுது செங்கல்பட்டில் உள்ள அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பணியாற்றுகிறார். தந்தையை இழந்த இவர், தனது தாய் மற்றும் சகோதரனுடன் கோடம்பாக்கத்தில் வசித்து வருகிறார்.

இருவீட்டாரின் சம்மதத்துடன் நடைபெறும் இந்தத் திருமணம் ஜூலை 11ஆம் தேதி சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர விடுதியில் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரபூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details