சென்னை: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியிருக்கும் 'பயணி' எனும் இசை ஆல்பத்தை அவரது தந்தையும் நடிகருமான ரஜினிகாந்த் இன்று(மார்ச் 17) தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.
அதில் அவர், ”9 ஆண்டுகளுக்குப் பிறகு இயக்கத்தில் காலடி எடுத்து வைத்திருக்கும் தனது மகளுக்கு வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளார். இந்த ஆல்பம் பாடலுக்கு அங்கீத் திவாரி இசையமைத்துள்ளார்.
இசையமைப்பாளர் அனிருத் இப்பாடலை பாடியுள்ளார். பாடல் வரிகளை விவேகா எழுதியுள்ளார். இதில், நடன இயக்குநர் ஜானி மாஸ்டர் மற்றும் ஸ்ரஷ்தி வெர்மா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த ஆல்பம் பாடல், ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தின் யூ-ட்யூப் சேனலில் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க:இந்தப் பாடலை பாடியவர் உங்கள் 'விஜய்' : பீஸ்ட் இரண்டாவது சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு