சென்னை: ’ஒத்த செருப்பு’ படத்திற்கு தேசிய விருது வழங்கப்பட்டுள்ள நிலையில், அதனை தற்போது நடைபெற்று வரும் தனது புதிய படத்தின் படப்பிடிப்பில் கேக் வெட்டி நடிகர் பார்த்திபன் கொண்டாடி உள்ளார்.
67ஆவது தேசிய திரைப்பட விருதுகளின் வெற்றியாளர்கள் பட்டியல் நேற்று (மார்ச்.22) அறிவிக்கப்பட்டது. இதில், பார்த்திபனின் ’ஒத்த செருப்பு’ படத்துக்கு சிறந்த படத்துக்கான சிறப்பு ஜூரி விருது கிடைத்தது. மேலும், சிறந்த ஒலிப்பதிவுக்கான விருதும் ஆஸ்கர் வென்ற ரசூல் பூக்குட்டிக்கு கிடைத்துள்ளது.
தற்போது ’இரவின் நிழல்’ என்ற புதிய படத்தை பாத்திபன் இயக்கி வரும் நிலையில், தேசிய விருது கிடைத்த தருணத்தை இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில், கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்துள்ளார்.
ஒத்த செருப்பு படத்துக்கு தேசிய விருது கிடைத்தற்கு கேக் வெட்டி கொண்டாடிய பார்த்திபன் அத்துடன் ஒத்து செருப்பு படத்துக்கு தேசிய விருது கிடைத்தற்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார். அதில் ஒத்த செருப்பு படத்தை தேர்வு செய்ய தேர்வுக்குழுவினருக்கும் மத்திய அரசுக்கும் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.
’ஒத்த செருப்பு படத்துக்காக பேராசைப்பட்டேன்’ பார்த்திபன் இயக்கி, நடித்து வெளியான ஒத்த செருப்பு, ஒரே ஒரு நபர் மட்டுமே நடித்து வெளிவந்த இந்தியப் படம் என்ற பெருமையைப் பெற்றது. படம் முழுக்க பார்த்திபனின் அசத்தலான நடிப்பு, வித்தியாசமான திரைக்கதை அமைப்பு, ஒளிப்பதிவு, ஒலி வடிவமைப்பு என பல்வேறு விஷயங்களுக்கு பாராட்டுகள் தொடர்ந்து குவிந்து வந்தன.
பார்த்திபன் தற்போது இயக்கி வரும் ’இரவில் நிழல்’ படமும் வித்தியாசமான பாணியில் உருவாகி வருகிறது. சிங்கிள் ஷாட்டில் உருவாகி வரும் இந்தப் படத்தை உலக சினிமாக்களிலேயே இதுவரை யாரும் செய்யாத புதுமையான முயற்சியுடன் உருவாக்கி வருவதாக நடிகர் பார்த்திபன் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: 'மும்பைக்கர்' டான் ஆன 'மக்கள் செல்வன்' - வைரலான போட்டோ!