தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுக்கும் சிம்பு! - santhanam

நடிகர் சிம்பு 14 ஆண்டுகள் கழித்து இயக்கவிருக்கும் புதிய படத்தில் நடிகர் சந்தானம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிம்பு -சந்தானம்

By

Published : May 29, 2019, 12:41 PM IST

தமிழ் சினிமாவில் திறமையைத் தாண்டி, சர்ச்சைகளுக்குப் பேர்போனவர் சிம்பு. சிலருக்கு வாழ்க்கைதான் பிரச்னையாக இருக்கும். இவருக்கு பிரச்னைதான் வாழ்க்கையே எனும் அளவுக்கு பிரச்னைகள் வந்தாலும் சளைக்காமல் அவற்றைக் கடந்து சாதித்து வருபவர் சிம்பு. அந்த வகையில் வெங்கட் பிரபு இயக்கும் மாநாடு படத்திற்காக லண்டன் சென்ற சிம்பு, தனது உடல் எடையைக் குறைத்து இந்தியா திரும்பினார். இதனையடுத்து அவருக்கு படவாய்ப்புகள் குவிய ஆரம்பித்துள்ளன. தற்போது தனது முன்னாள் காதலி ஹன்சிகா நடிக்கும் மஹா படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்து வருகிறார்.

இந்தப்படத்தில் சிம்புவிற்கு, ஒரேயொரு காட்சியில் வந்து செல்லும் சிறப்புத்தோற்றமல்ல; அது முக்கிய கதாப்பாத்திரம் எனக் கூறப்படுகிறது. முன்னாள் காதலர்களான ஹன்சிகாவும், சிம்புவும் சேர்ந்து நடிக்கும் புகைப்படக் காட்சிகள் வலைதளப் பக்கங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில், சிம்பு வல்லவன் படத்திற்குப் பிறகு மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தனது சிறு வயதிலேயே மன்மதன் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி வெற்றிக்கொடி நாட்டிய சிம்பு அதனைத் தொடர்ந்து வல்லவன் படத்தை இயக்கினார். இப்படத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போதே சிம்புவிற்கும் நயன்தாராவிற்கும் காதல் ஏற்பட்டு பின்னர் கருத்து வேறுபாட்டால் பிரிந்துவிட்டனர்.

மஹா படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படம்

தற்போது இவர் இயக்கும் படத்தில் சந்தானம் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. காமெடியனாக இருந்த சந்தானம் முழுநேர நடிகனாக மாறிய பிறகு நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று கூறிவந்தார். ஆனால் சிம்புவிற்காக அதை தளர்த்தியுள்ளார். மாநாடு படத்திற்குப் பிறகு சிம்பு இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details