அசாத்திய நடிப்பால் ரசிகர்களின் மனதை வென்றவர் அட்டகத்தி தினேஷ். எதிர்பார்த்த வெற்றிக்காக காத்திருக்கும் தினேஷ் 'இரண்டாம் உலகப்போர் கடைசிக் குண்டு' படத்தில் ஒரு அழுத்தமான வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில், 'நானும் சிங்கிள் தான்' என்ற படத்தில் நடித்து வருகிறார். கோபி இயக்கும் இப்படத்தை பாடி த்ரி நிறுவனம் சார்பில் ஜெயகுமார், 'புன்னகை பூ' பட நடிகை கீதா ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.
சத்தமின்றி காதல் படத்தில் நடித்து முடித்த அட்டகத்தி தினேஷ்! - படப்பிடிப்பு
அட்டகத்தி தினேஷ் நடித்து வரும் 'நானும் சிங்கிள் தான்' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இளைஞர்களை கவரும் வகையில் காதலை மையப்படுத்தி உருவாகும் இந்தப் படத்தில் தினேஷுக்கு ஜோடியாக தீப்தி திவேஸ் நடிக்கிறார். இப்படத்தில், மொட்டை ராஜேந்திரன், மனோபாலா, செல்வேந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்நிலையில், இப்படம் குறித்து தயாரிப்பாளர் ஜெயக்குமார் கூறுகையில், ஒரு புது மாதிரியான ஒரு கிளைமாக்ஸ் காட்சி இந்த படத்தில் உள்ளது. அது நிச்சயம் ரசிகர்களை கவரும்.
படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு லண்டன் மற்றும் சென்னை ஆகிய இடங்களில் நடைபெற்றது. அக்டோபர் முதல் வாரத்தில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளோம் என்று அவர் தெரிவித்தார்.