இலங்கையில் 2009ஆம் ஆண்டு நடந்த இன அழிப்பு நாள், உலகத் தமிழர்களை ஒருபோதும் மறக்கச் செய்துவிடாது. அதிலும் மே 17, 18 ஆகிய தினங்களில் முள்ளிவாய்க்காலில் லட்சக்கணக்கான அப்பாவி மக்கள் இலங்கை ராணுவத்தினரின் தாக்குதல்களால் கொல்லப்பட்டனர். இதனையடுத்து விடுதலைப்புலிகளுடான உள்நாட்டுப் போர் முடிவடைந்ததாக அப்போதைய இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச அறிவித்தார்.
முள்ளிவாய்க்கால் இறுதிப்போர் நிறைவடைந்து 12 ஆண்டுகளாகியும் இதற்கான நீதி இன்னும் கிடைக்காமல் இருக்கிறது. இறுதிப்போரில் சிங்கள ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட ஈழத் தமிழர்களையும், தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் உயிர் நீத்தவர்களையும் நினைவுகூரும் விதமாக ஆண்டுதோறும் மே 18ஆம் தேதி உலகம் முழுவதும் நினைவேந்தல் நிகழ்வு நடைபெறுகிறது.