இயக்குநர் ரத்தின் சிவா இயக்கத்தில் ஜீவா நடிப்பில் உருவாகி வரும் படம் 'சீறு'. இப்படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக ரியா சுமன் நடிக்கிறார். நடிகர் நவ்தீப் உள்ளிட்டோரும் இப்படத்தில் நடிக்கின்றனர். வேல்ஸ்ஃபிலிம் இண்டர்நேஷனல் தயாரிக்கும் இப்படத்திற்கு பிரசன்னா எஸ். குமார் ஒளிப்பதிவு செய்கிறார். டி.இமான் இசையமைக்கிறார். காதல், ஆக்ஷன் என கமர்ஷியலாக இப்படம் உருவாகி வருகிறது.
'சீறு' பாடகராக அறிமுகமாகும் பிரபல பாடகரின் மகன்! - ஷங்கர் மகாதேவன்
ஜீவாவின் நடிப்பில் உருவாகி வரும் 'சீறு' படத்தில் தமிழின் பிரபல பாடகரின் மகன் பாடகராக அறிமுகமாக உள்ளார்.
seeru
இந்நிலையில், டி.இமான், விவேகா எழுதியுள்ள பாடலுக்கு ஷங்கர் மகாதேவனின் மகன் சிவம் மகாதேவனை பாடகராக அறிமுகம் செய்ய உள்ளார். அக்டோபர் மாதம் படத்தை வெளியிட படக்குழு முடிவுசெய்துள்ளது.
இதையும் வாசிங்க: Asuran Movie: இளைய சூப்பர் ஸ்டார் பட்டத்தால் வந்த குழப்பம் - விளக்கமளித்த திரையரங்கம்!