தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

நடிகை கடத்தல் வழக்கு: வீடியோ பதிவுகளை ஆய்வு செய்ய நடிகர் திலீப் விண்ணப்பம் - footages regarding actress attack case

இளம் நடிகை கடத்தல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மலையாள நடிகர் திலீப், உச்ச நீதிமன்ற அனுமதியைத் தொடர்ந்து, வீடியோ பதிவுகளை ஆய்வு செய்ய விசாரணை நீதிமன்றத்தில் அனுமதி கோரியுள்ளார்.

dileep
dileep

By

Published : Dec 4, 2019, 10:21 AM IST

கடந்த 2017ஆம் ஆண்டு பிரபல மலையாள நடிகை காரில் கடத்தப்பட்டு பாலியல் ரீதியாக துன்புறுத்தல் செய்யப்பட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு, இதன் பின்னணியில் பிரபல மலையாள நடிகர் திலீப் மூளையாக செயல்பட்டதாகக்கூறி அவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். தொடர்ந்து ஜாமினில் அவர் விடுவிக்கப்பட்டார்.

இந்த வழக்கில், தான் குற்றமற்றவன் என்பதை நிரூபிக்க, நடிகை கடத்தலின் போது எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் வீடியோ மற்றும் அதனை எடுக்க பயன்படுத்திய ஃபோனையும் தங்கள் வசம் ஒப்படைக்க வேண்டும் என்ற திலீப் கேரள உயர் நீதிமன்றத்தை நாடினார். அவரது கோரிக்கையை உயர்நீதிமன்றம் நிராகரித்ததை அடுத்து, திலீப் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.

நடிகர் திலீப்

இந்த வழக்கு கடந்தவாரம் உச்ச நீதிமன்ற நீதிபதி எ.எம்.கான்வில்கர் முன்பு விசாரணைக்கு வந்தபோது, வீடியோ உள்ளிட்ட ஆதாரங்களைக் கோரியிருந்த திலீப்பின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது. மேலும், வீடியோ ஆதாரங்களை குற்றம்சாட்டப்பட்ட திலீப்பும், அவரது வழக்கறிஞரும் ஆய்வு செய்யலாம் என்று அனுமதி அளித்திருந்தது.

இந்த நிலையில், வீடியோ பதிவுகளை ஆய்வு செய்ய விசாரணை நீதிமன்றத்தில் திலீப் தரப்பு அனுமதி கோரியுள்ளது. வீடியோ தரவுகளை ஆய்வு செய்ய தொழில்நுட்ட வல்லுநரை ஏற்பாடு செய்துவருவதாக திலீப் தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் அறிவித்தார். தங்களுக்கு இரண்டு வாரம் வரை அவகாசம் தேவை எனவும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, ஒரு வாரகாலத்திற்குள் இதுதொடர்பான விவரத்தை அறிவிக்க வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்தது.

இதையும் படிங்க...

நடிகை கடத்தல் வழக்கு: நடிகர் திலீப்பின் கோரிக்கை நிராகரிப்பு

ABOUT THE AUTHOR

...view details