தமிழில் கார்த்தியை வைத்து 'தோழா' படத்தை இயக்கியவர் வம்சி பைடிபள்ளி. தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வரும் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் மகேஷ்பாபு நடித்த ’மகரிஷி’ திரைப்படம் சிறந்த பொழுதுபோக்கு திரைப்படத்திற்கான தேசிய விருது பெற்றது.
இதனைத் தொடர்ந்து வம்சி விஜய்யை வைத்து 'தளபதி 66' படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தை தில் ராஜூ தயாரிக்கிறார். இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியாகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று (செப்.26) வெளியானது. இந்த அறிவிப்பால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்த அறிவிப்பை தொடர்ந்து தில் ராஜூ, இயக்குநர் வம்சி, அவரது குடும்பத்தினர் திருப்பதியில் சாமி தரிசனம் செய்தனர். அப்போது அங்கு வைத்து செய்தியாளர்களை சந்தித்த வம்சி கூறுகையில், " 'மகரிஷி' படத்துக்கு தேசிய விருது அறிவித்த பின் இங்கு வந்து சாமி தரிசனம் செய்ய நினைத்தோம்.