சுஷாந்த் சிங் நடிப்பில் கடைசியாக உருவான படம் 'தில் பேச்சாரா'. முகேஷ் சப்ரா இயக்கியுள்ள இத்திரைப்படம் மே மாதம் வெளியாகவிருந்த நிலையில், கரோனா அச்சுறுத்தல் காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் இன்று 4 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி பட டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.
சுஷாந்த் சிங்கின் 'தில் பேச்சரா' டிரெய்லர் வெளியீடு! - சுஷாந்த் சிங்
சுஷாந்த் நடிப்பில் கடைசியாக உருவான 'தில் பேச்சரா' படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
Sushanth
இப்படம் 'தி ஃபால்ட் இன் அவர் ஸ்டார்ஸ்' புத்தகத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. டிரெய்லரில், புற்றுநோயால் அவதிப்படும் பெண்ணைக் காதலித்து, அவரின் ஆசைகள் அனைத்தையும் நிறைவேற்றுபவராக சுஷாந்த் நடித்திருக்கிறார். ஒரு பக்கம் இவர்கள் அழகாக இருக்க, மற்றோரு பக்கம் ஏ.ஆர். ரஹ்மானின் இசை டிரெய்லரை கூடுதல் அழகாக்கிறது. இப்படம் வரும் ஜூலை 24ஆம் தேதி ஒடிடி தளமான ஹாட் ஸ்டாரில் வெளியாகிறது.