கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் - சோல்ஜர் பேக்டரி சார்பில் பிரமாண்டமாகத் தயாராகியுள்ள படம் 'டிக்கிலோனா'. கார்த்திக் யோகி இயக்கிய இப்படத்தில் நடிகர் சந்தானம் மூன்று வேடங்களில் நடித்துள்ளார்.
ஓடிடி தளத்தில் வெளியான டிக்கிலோனா! - சந்தானம் படங்கள்
நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள ’டிக்கிலோனா’ திரைப்படம் நேரடியாக ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
டிக்கிலோனா
இந்திய அணியின் பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இதில் அகனா, ஷிரின் ஆகியோர் நடித்துள்ளனர். இந்நிலையில் இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று (செப். 10) நேரடியாக ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியானது.
சயின்ஸ் ஃபிக்ஷன் பாணியில், டைம் மெஷினை மையமாக வைத்து வெளியாகியுள்ள இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.