தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'டிக்கிலோனா' இயக்குநருக்கு மீண்டும் வாய்ப்பு! - சந்தானத்தின் டிக்கிலோனா

சென்னை: சந்தானத்தின் 'டிக்கிலோனா' படத்தை இயக்கிய இயக்குநரின் அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

dikilona
dikilona

By

Published : Jan 26, 2021, 5:28 PM IST

சந்தானம் மூன்று வேடங்களில் நடித்துள்ள படம் 'டிக்கிலோனா'. கார்த்திக் யோகி இயக்கியுள்ள இப்படத்தில் ஹர்பஜன் சிங் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். டைம் டிராவலை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் யோகி பாபு, அனகா, ஆனந்தராஜ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். சினிஷ் தயாரிக்கிறார். கேஜேஆர் ஸ்டுடியோஸ் படத்தை வெளியிடுகிறது.

இயக்குநர் கார்த்திக் யோகி

இந்நிலையில், 'டிக்கிலோனா' படத்தை பார்த்த கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் இயக்குநர் கார்த்திக் யோகிக்கு தனது தயாரிப்பு நிறுவனத்தில் அடுத்த படம் இயக்க வாய்ப்பு வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details