சந்தோஷ் ஆனந்த்ராம் இயக்கத்தில் புனித் ராஜ்குமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'யுவரத்னா'. இதில் புனித் ராஜ்குமாருடன் சயீஷா, சோனு கவுடா, தனஞ்சயா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ள இப்படத்தை ஹொம்பாளே ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
ஓடிடியில் வெளியாகும் கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமாரின் 'யுவரத்னா' - கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் யுவரத்னா
கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் - சாயிஷா நடிப்பில் உருவாகியுள்ள 'யுவரத்னா' திரைப்படம் ஓடிடி தளமான அமேசான் ப்ரைமில் வெளியாகவுள்ளது.
'யுவரத்னா' கல்லூரி வளாகத்தின் பின்னணியில் இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. அரசியலுடன் இணைந்து கல்லூரியின் தனியார்மயமாக்கலுக்கு எதிராக போராட்டும் நபராக புனித் ராஜ்குமார் இப்படத்தில் நடித்துள்ளார். காதல், அதிரடிக் காட்சிகள் என படம் முழுக்க முழுக்க மசாலா படமாக இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தை முதலில் திரையரங்கில் வெளியிட முடிவு செய்யப்பட்டிருந்த நிலையில், கரோனா அச்சுறுத்தல் காரணமாக தற்போது இப்படம் முன்னணி ஓடிடி தளமான அமேசான் ப்ரைமில் நாளை (ஏப்ரல் 9) வெளியாகிறது.