ஹல்க், அயன் மேன் போன்ற சூப்பர் ஹீரோக்களுக்கு உலகம் முழுவதும் தனி தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. 2012 ஆம் ஆண்டு வெளியான 'அவெஞ்சர்ஸ்' படத்தில் ஹல்க் வேடத்தில் நடித்தது குறித்து மார்க் ருஃபாலோ மனம் திறந்துள்ளார். மார்வெல் சினிமாடிக் யுனிவர்ஸின் (MCU) ஒருபகுதியாக ஆன்லைன் அரட்டை அரங்கை நடத்திவரும் நடிகர் ஜிம்மி ஃபாலோனின் சமீபத்திய நிகழ்ச்சியில் ஹல்க் கதாபாத்திரம் குறித்து விவாதிக்கப்பட்டது.
அதில் பங்கு பெற்ற மார்க் ருஃபாலோ கூறுகையில், முதலில் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க நான் மிகவும் பயந்தேன். முன்னதாக 2003 ஆம் ஆண்டு எரிக் பென்னா (Eric Bana) நடிப்பில் வெளியான ஹல்க், 2008 ஆம் ஆண்டு எட்வர்ட் நார்டன் (Edward Norton) நடிப்பில் வெளியான இன் தி இன்க்ரெடிபிள் ஹல்க் உள்ளிட்ட படங்களை பார்த்து பிரமித்துள்ளேன்.
இவர்கள் ஹல்க் கதாபாத்திரத்தை மிகவும் சிறப்பாகவும் நேர்த்தியாகவும் செய்துள்ளனர். எனவே இவர்களை விட சிறப்பாக என்னால் என்ன செய்ய முடியும் என நினைத்தேன். அதுமட்டுமல்லாது நான் தனியாக இருந்து படம் பண்ணி பழகியிருந்தேன். அவெஞ்சர்ஸ் திரைப்படம் சூப்பர் ஹீரோக்களின் கலவையில் உருவாகப்பட்டது. அதற்கு நான் எந்த அளவிற்கு சரியாக இருப்பேன் என்று என் மனதில் கேள்வி இருந்தது.
அவெஞ்சர்ஸ் இயக்குநர் ஜோஸ் வேடன் என்னை அணுகிய போது, ஹல்க் கதாபாத்திரத்திற்கு நீங்கள் சரியாக இருப்பீர்கள் என்றார். பின் அயன் மேன் ராபர்ட் டி.ஜீனியர் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டார். அப்போது, நாம் இந்த கதாபாத்திரத்தை சும்மா தகர்தெறிவேம். ருஃபாலோ நாம் போகலாம். நமக்கு கிடைத்த நல்வாய்ப்பு இது என்று அயன்மேன் பாணியில் கூறினார். அதற்கு பின்னரே நான் இந்த கதாபாத்திரம் செய்வதில் உறுதியானேன். தற்போது அவரின் வார்த்தையை நான் நிறைவேற்றியுள்ளேன் என நினைக்கிறேன் என்றார்.