நடிகர் விஷாலும் தெலுங்கு நடிகை அனிஷா அல்லா ரெட்டியும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் செய்துக்கொண்டனர். இதனையடுத்து அவர்களது ரசிகர்களும் மகிழ்ச்சியில் இருந்தனர்.
என்னதாங்க ஆச்சு நம்ம விஷாலுக்கு...? திருமணம் நடக்குமா, நடக்காதா...? - விஷால்
நடிகர் விஷாலின் திருமணம் பற்றிய சந்தேகம் தற்போது சமூகவலைதளங்கில் விவாதப்பெருளாக மாறியுள்ளது.
அவர்களின் திருமணம் அக்டோபர் மாதம் நடக்கும் என்று நிச்சயிக்கப்பட்டது. ஆனால் இரண்டு பக்கமும் திருமண வேலையை இதுவரை தொடங்கவில்லை. இந்நிலையில் அனிஷா தனது சமூகவலைதள பக்கத்தில் விஷாலுடன் நடைபெற்ற நிச்சயதார்த்த புகைப்படத்தை முற்றிலும் நீக்கி உள்ளனர்.
இதே போன்றும் விஷாலும் திரைப்படத்தில் தொடர்ந்து நடித்துக் கொண்டு வருகிறார். திருமண விவகாரம் பற்றி இருவீட்டாரும் இதுவரை எதுவும் மறுப்போ, கருத்தோ கூறவில்லை. இதனால் விஷால்-அனிஷா திருமணம் நின்றுவிட்டதோ என்ற பேச்சு சமூகவலைதளங்களிலும் கோலிவுட் வட்டாரங்களிலும் சலசலப்புடன் வலம் வருகிறது.