தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

தங்க கடத்தல் வழக்கில் சிக்கிய அக்‌ஷரா ரெட்டி? - akshara reddy

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான அக்‌ஷரா ரெட்டி, கேரளாவில் தங்கம் கடத்திய வழக்கில் தொடர்புடையவர் என்று சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது.

akshara reddy
அக்‌ஷரா ரெட்டி

By

Published : Oct 19, 2021, 6:18 PM IST

Updated : Oct 19, 2021, 8:28 PM IST

தனியார் தொலைக்காட்சியில் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் ஐந்தாவது சீசன் தொடங்கி, 15 நாள்களாகியுள்ளது. இதில் 18 போட்டியாளர்கள் பங்கேற்ற நிலையில், இருவர் வெளியேறிவிட்டனர்.

இதில் மாடல் அழகியான அக்‌ஷரா ரெட்டி பங்கேற்றுள்ளார்.

இந்நிலையில் இவர் கேரளாவில் கடந்த 2013ஆம் ஆண்டு நடந்த, தங்கக் கடத்தல் வழக்கில் தொடர்புடையவர் என்று சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது.

அதுகுறித்தான தகவலில், "அவர் தனது உண்மையான பெயரான ஸ்ராவ்யா சுதாகர் என்பதை மறைத்து, அக்‌ஷரா ரெட்டி என மாற்றிக்கொண்டார். தங்க கடத்தல் வழக்கில் ஸ்ராவ்யா சுதாகரிடம் சிபிஐ அலுவலர்கள் விசாரணை நடத்தினர்.

தன்னைச் சுற்றிவரும் பல்வேறு சர்ச்சைகளுக்குப் பயந்து தான் ஸ்ராவ்யா பெயரை மாற்றிக் கொண்டார். மேலும் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டார்" எனவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க:BB Day 15: எதிர்பாராத நாமினேஷன் பட்டியல்... எரிச்சலூட்டும் அபிஷேக்

Last Updated : Oct 19, 2021, 8:28 PM IST

ABOUT THE AUTHOR

...view details