லாஸ் ஏஞ்சலிஸ்: ஹாலிவுட்டின் லேட்டஸ்ட் காதல் ஜோடிகளாக மாறியிருக்கும் 'டைட்டானிக்' பட நாயகன் லியோணார்டோ டிகாப்ரியோ - நடிகை கமிலா மோரோன், குஸ்டாவியா நகரில் ஜாலியாக ஊர் சுற்றியுள்ளனர்.
போர் அடித்து அமைதியாக உட்கார்ந்திருக்கும் கமிலா அருகே சென்று, தனது செல்போன் மூலம் இம்ப்ரஸ் செய்ய டிகாப்ரியோ முயற்சிக்கும் புகைப்படம் கடந்த இரு நாட்களாக இணையத்தில் அதிகமாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
குஸ்டாவியா நகருக்குச் சென்றுள்ள இவர்கள் இருவரும், அங்குள்ள தீவுகளில் பொழுதைக்கழித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து தங்களை அழைத்துச் செல்லும் படகுக்காகக் காத்திருந்தனர். அப்போது சலிப்பு தட்டிய முகத்துடன் அமர்ந்திருந்த கமிலா அருகே சென்ற டிகாப்ரியோ தனது செல்போனை பார்த்தபடி இம்ப்ரஸ் செய்ய முயற்சித்துள்ளார்.
இந்தப் புகைப்படம்தான் தற்போது வைரலாகி இருக்கும் நிலையில், டிகாப்ரியோவின் ஜொள்ளுத்தனத்தை பலரும் கிண்டலடித்துள்ளனர். 45 வயது சிங்கிள் மேனாக இருக்கும் டிகாப்ரியோ, 22 வயதான கமிலாவுடன் டேட்டிங்கில் ஈடுபட்டு வருகிறார். தன்னை விட பாதி வயது குறைவான பெண்ணுடன் ஊர் சுற்றி வருவதால், ரசிகர்களுக்கு தெரியாத வண்ணம் தொப்பி, கூலிங் கிளாஸ் அணிவதுமாக உலா வருகிறார் டிகாப்ரியோ.
இதையடுத்து இவரது தாயார் இர்மிலின், தனக்கு கமிலாவை மிகவும் பிடித்திருப்பதாகவும், விரைவில் தனது மகன் அவரிடம் காதலை வெளிப்படுத்த வேண்டும் எனவும் கூறியிருக்கிறார். இதனிடையே கடந்த ஆகஸ்ட் மாதம் டிகாப்ரியோவின் தாய் இர்மிலினை சந்தித்து பேசியுள்ளார் கமிலா.
இது ஒரு புறம் இருக்க, கடந்த டிசம்பரில் மியாமியில் நடைபெற்ற பார்ட்டி ஒன்றில் மாடலும், நடிகையுமான கெண்டால் ஜெல்லரை பார்த்து டிகாப்ரியோ ஜொள்ளு விட்டார் என தகவல்கள் வெளிவந்தன. இதைத்தொடர்ந்து இதுபோன்ற செயல்களால் கமிலாவுடனான நல்லுறவை தனது மகன் கெடுத்துக்கொள்வது கவலையளிப்பதாக டிகாப்ரியோவின் தாயார் இர்மிலின் தெரிவித்துள்ளார்.
கடந்த 2017 முதல் டிகாப்ரியா - கமிலா பழகிவரும் நிலையில், ஹாலிவுட் ரசிகர்களின் மொத்த கண்களின் கவனமும் இவர்கள் மீதே உள்ளது.