உலகப் புகழ்பெற்ற மெக்ஸிகோ இயக்குநர் டெல் டோரோ. இவரது 'ஷேப் ஆஃப் தி வாட்டர்' ஆஸ்கர் வென்றது. உலகளவில் பெயர் பெற்ற இவர் தற்போது 1946ஆம் ஆண்டில் வெளிவந்த ’நைட்மேர் ஆலி’ நாவலைத் தழுவி திரைக்கதை எழுதியுள்ளார்.
இயக்குநர் டெல் டோரோவின் அடுத்த படத்தில் நடிக்கும் டிகாப்ரியோ - Del Toro
லாஸ்ஏஞ்சல்ஸ்: இயக்குநர் டெல் டோரோவின் அடுத்த படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் டிகாப்ரியோ நடிக்க பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

டிகாப்ரியோ
2017ஆம் ஆண்டு ’ஷேப் ஆஃப் தி வாட்டர்’ ஆஸ்கர் வென்றதையடுத்து டெல் டோரோ இயக்கும் முதல் படம் என்பதால் சினிமா வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்புக்கு உள்ளாகியிருக்கிறது.
இதில், டிக்காப்ரியோ நடிப்பாரா இல்லையா என்பது முடிவாகாத நிலையில், ரசிகர்கள் இரண்டு உலக ஜாம்பவான்கள் இணைவார்களா இல்லையா என ஆவலுடன் காத்திருக்கின்றனர்.