தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

வைரலாகும் ரஜினி, நயன்தாரா புகைப்படம் - 'தர்பார்' பட ஷூட்டிங்! - rajini nayanthara viral

'தர்பார்' படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் ரஜினி மற்றும் நயன்தாராவின் புகைப்படம் இணையத்தில் கசிந்து வைரலாகி வருகிறது.

ரஜினி, நயன்தாரா

By

Published : Apr 25, 2019, 3:58 PM IST

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான 'பேட்ட' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படத்தினைத் தொடர்ந்து ரஜினி தற்போது ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடித்துவருகிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் ரஜினி, நயன்தாரா, யோகி பாபு ஆகியோர் நடித்து வருகின்றனர். தர்பார் என பெயர் வைக்கப்பட்டிருக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ட்ரெண்டானது.

தர்பார் படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு ஏப்ரல் 10ஆம் தேதி மும்பையில் தொடங்கி, ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வரும் நிலையில், நயன்தாரா இன்று படப்பிடிப்பில் இணைய இருப்பதாக படக்குழு அறிவித்தது. அதன்படி, நயன்தாரா படப்பிடிப்பு தளத்திற்கு வெள்ளைப் புடவையில் வரும் புகைப்படம் இணையத்தில் கசிந்துள்ளது. அதேபோல், ரஜினியும் புதிய கெட்டப்பில் இருக்கும் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.

தர்பார் ரஜினி

முன்னதாக, நேற்று படப்பிடிப்புத் தளத்தில் யோகி பாபுவுடன் ரஜினி நடந்து வரும் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details